R.P. Rajanayahem 2008 post
November 16, 2008
மக்கள் செல்வாக்கு மிக்க நடிகர்கள்
- R.P. ராஜநாயஹம்
எம்ஜியார் ஏழைகளை நேசித்ததில் வேஷம் இருந்தது.
வி பி சிந்தன் கத்தி குத்துப் பட்டு மருத்துவமனையில் இருந்த போது பார்க்க போன
எம்ஜியார் ' நீ எல்லாம் என்ன கம்யூனிஸ்ட் . உன்னை குத்தியிருக்காங்கே . இந்நேரம் நூறு குடிசை எரிந்திருக்க வேண்டாமா ' என்று கேட்டாராம்.
சினிமாவில் ' மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர மறுத்திடுமா ?' என்று உருக்கமாக பாடியவர்.
இதை சேலத்தில் நான் பேசிய போது தோழர்கள் கேட்டார்கள் : ' அதற்கு சிந்தன் என்ன பதில் சொன்னார் '
சிந்தன் என்ன பதில் சொல்லியிருக்க முடியும். எம்ஜியார் முன் கல்யாண சுந்தரம், பால தண்டாயுத பாணி போன்ற மேல் மூடிகள் அப்போது கை கட்டி நின்றார்கள்.
பால தண்டாயுதபாணி அப்போது ஒரு பொது கூட்டத்தில் எம்ஜியாரை குறிப்பிடும்போது ' புரட்சி தலைவர் ' என்று சொன்னார்.
மேடையில் இருந்த ஜெயகாந்தன் வேதனையுடன் பேசினார் .' பாலா, நீயா பேசுவது! யாரை புரட்சி தலைவர் என்கிறாய். நீ மார்க்சை புரட்சி தலைவர் என்று சொல்லியிருந்தால் மகிழ்ந்திருப்பேன். போயும் போயும் இந்த எம்ஜியாரை புரட்சி தலைவர் என்கிறாயே ."
ரஜினி காந்த் தன் வேலைகாரர்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொள்வார் என கேள்விபட்டிருக்கிறேன் .
"வேலைக்காரன் " படத்தின் நாயகன்.
அத்வானி, துக்ளக் சோ சகிதம் ரஜினியை அரசியலுக்கு வரச்சொல்லி தாங்கி கொண்டிருக்கிறார்கள் .
இப்போது ஒரு செய்தி படித்தேன்.
இளைய தளபதி விஜய் வீட்டில் இருந்து கிளம்பும்போது அவர் வீட்டு வேலைக்காரர்கள் முகத்தில் முழிக்க மாட்டாராம்.
அவர்கள் அப்போது ஒளிந்து கொள்ள வேண்டுமாம். சகுனத்தடை!
இன்றைக்கு ரஜினியை விட விஜய்க்கு செல்வாக்கு அதிகம் என புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
விஜய் ரசிகர்கள் திருப்பூரில் உண்ணாவிரதமோ , போராட்டமோ ..பந்தல் போட்டு உட்க்கார்ந்திருக்கிறார்கள்.
'போக்கிரி' அரசியல் முஸ்தீபு.
தினமலரில் சரத் குமாரின் பேச்சு
கட்டம் கட்டி போட்டிருந்தார்கள்.
"குடும்ப அரசியல் எனக்கு பிடிக்காது .ஆனால் தொண்டர்கள் ரொம்ப வற்புறுத்துவதால் ராதிகாவுக்கு கட்சி பதவி கொடுக்கலாம் என முடிவு செய்திருக்கிறேன் ."
Every Hero becomes a bore at last!